பதினைந்தாயிரம் ஆண்டுகட்கு முன்னரே தமிழ் நிலத்தில் வாழ்ந்த “வலையர்கள்..! ”
இனக்குழுக் குமுகம் என்பது தமிழினத்தின் தனித்துவம்! தமிழர் இனம் கலப்பினம் ஆவதைத் தடுத்தது மற்றும் ‘யாரெல்லாம் தமிழர்’ என்கிற அடிப்படைக் கேள்விக்கு விடை பகருவது சாதி ஒன்றுதான். இதனை உணர்ந்ததால்தான் தமிழர்களின் ஆட்சி அதிகாரங்களைக் கைப்பற்றிய வடுகர்கள் சமத்துவம் என்கிற போர்வையில் ‘தமிழரின் சாதியை’ (மட்டும்) இதுகாறும் ஒழித்திட முனைந்தனர். ஆனால் அதையும் கடந்து தமிழினம் இன்றும் தமக்குரிய பண்டை வரலாற்றுப் பாரம்பரியங்களைத் துளியும் இழக்காது தலை நிமிர்ந்து நிற்கிறது.
புறநானூற்றுக் (எட்டுத்தொகை நூல்களில் ஒன்று) காலத்தில் தமிழகத்தில் இருந்தது நால்வகைச் சாதியே அவையாவன பறையன், பாணன், துடியன், கடம்பன் என்பன. அதன் பின்னர் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தமிழரிடையே மேலும் சில சாதிகள் பிறந்தன. இதற்கான குறிப்புகள் “சங்க இலக்கியங்கள்” எனப்படும் தொகுப்பிலுள்ள நூல்களில் உள்ளன. பல்கிப் பெருகிவிட்ட இன்றைய சாதி அமைப்பில் ஆதிக்கம் பெற்றுள்ள பல சாதிகள் அன்றைக்கு இருந்ததற்கான சுவடே இல்லை. ஆனால் மருத(வயல்சார்) நிலப்பகுதிகளிலும்,நெய்தல்(கடல்சார்) பகுதிகளிலும் வலைஞர்/வலைவர் எனும் பெயரில் வேட்டை, மீன்பிடிச் சமூகம் ஒன்று வாழ்ந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களிலில் ஏராளாமாக உள்ளன. இந்த வலைஞர்களே இன்றைய வலையர்கள், வலையர் என்பதன் செய்யுள் வடிவாய் வலைஞர்/ வலைவர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாய் அப் பனுவலுக்கு விளக்கவுரை எழுதும் ஆசிரியர்கள் அனைவருமே குறிப்பிடுகின்றனர். மேலும் கேரளத்தில் வாழும் வலையர்கள் இன்றும் “வலைஞர்” என்றே அழைக்கப்படுகின்றனர்.
அந்தவகையில் “பெரும்பாணற்றுப்படை” எனும் நூலில் வலையர்களைப் பற்றி, வலையர்களின் வாழ்வியலைப் பற்றி, வறியோருக்கு வாரி வழங்கும் அவர்தம் வல்லான்மையப் பற்றி, உணவு முறைகளைப் பற்றி இடம் பெற்றுள்ள தகவல்களை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன். தமிழினக்குழுக்களில் வலையர்கள் எவ்வளவு பழமையானவர்கள் என்பதை அறிந்திட அவை உதவும்!
பெரும்பாணற்றுப்படை;
காஞ்சியை ஆண்ட “தொண்டைமான் இளந்திரையன்” எனும் குறுநில மன்னனிடமிருந்து பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு பெரும்பாணன் (பெரும்பாணன்= பேரியாழ் கொண்டவன்) வழியில் காணும் இன்னொரு பாணனின் வறிய நிலை கண்ட பாணன் அவனை ஆற்றுப்படுத்தும் விதமாய், இளந்திரையனைச் சென்று சந்திப்பதற்கு அவனுக்கு வழி சொல்லுகிறான். அப்படிச் சொல்லிவரும் பொழுது அவன் முதலில் எயினர் (வேட்டுவர்) குடியிருப்பைக் குறிப்பிடுகிறான்,அடுத்து இடையர் குடியிருப்பு, உழவர் குடியிருப்பு முதலியவற்றை குறிப்பிட்டுவிட்டு மருத நிலம் பற்றிச் சொல்லுகையில் வலையர்களின் குடியிருப்பைக் குறிப்பிடுகிறான். அதில் இடம்பெற்றுள்ள செய்திகளைக் கீழே காண்போம்...
பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட வலையர்களின் குடில்...!
கடற்கரையை அடுத்து மீன்பிடித் தொழில் செய்த வலையர்களின் குடில்கள் வரிசையாக அமைந்திருந்தன. அவர்தம் குடிலின் கூரைகள் பேய் கருப்பந்தட்டை(அ) கொருங்கைச்சி (சோளத்தட்டை)களைக் கொண்டு அமைக்கப்பெற்றிருந்தன. குடிலின் உட்புறம் இடை இடையே வஞ்சி, காஞ்சி மரங்களாலான தூண்களை கயிற்றினைக் கொண்டு கட்டியிருந்தனர், அதன் மேற்புறத்தே வேழக்கோரையை வரிச்சாக நிறைத்து அதனைத் தாழை நாரால் கட்டித் தருப்பை புல்லால் வேயப்பட்ட குடில்களில் வாழ்ந்தனர். அவர்களின் வீட்டு வாசலிலே பறி எனும் மீன் பிடிக் கருவிகள் எப்போதும் கிடக்குமாம். நெய்தல் நில மரமான புன்னை மரத்தினது வளைந்த கால்களை வீட்டின் முன்புறம் நட்டு அதனைப் பந்தலாக்கி அவற்றின் மீது வலையர்கள் புடலை, பாகை, சுரை போன்ற கொடிகளைப் படரவிட்டிருந்தனர், அதன் காய்கள் எப்போதும் கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருக்குமாம். பந்தலின் அடியிலே வெண்மணலைப் பரப்பி, அதன் மேலமர்ந்து கொடிகளின் நிழலில் குடும்பத்தோடு கதையளந்து கொண்டிருப்பனராம்.
மேலும் அவர்களின் இல்லத்தின் அருகிலேயே கருமையான, ஆழம் கொண்ட குளங்கள் இருக்குமாம்.அதில் புலால் நாற்றமுடைய அம்பு போன்ற இறால் மீன்கள் நீந்திக் கொண்டிருக்குமாம். அந்த இறால்களையும் அவ்வலையர்கள் வலை வீசிப் பிடிப்பனராம். கோடை காலத்தில் கூட அக்குளங்களில் ஓர் ஆள் உள்ளிறங்கி கைகள் தூக்கிடும் தோள் உயரத்திற்கு மேலுள்ள ஆழத்தில் தண்ணீர் இருக்குமாம். எனவே அக்கால மீனவ வலையர்கள் செல்வச் செழிப்போடு, மன நிறைவுற்ற ஒரு வாழ்வை வாழ்ந்துள்ளது புலனாகிறது். இதனை...
வேழம்நிரைத்து,வெண்கோடு விரைஇ,
தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த,
குறியிறைக் குரம்பைப் பறியுடை முன்றில்,(265)
கொடுங்கார் புன்னைக் கோடுதுமித்து இயற்றிய
பைங்காய் தூங்கும் பாய்மணற் பந்தர்,
இணையரும் முதியரும் இணையுடன் துவன்றி,
புலநுனைப் பகழியும் சிலையும் மான,
செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும் (270)
மைஇருங் குட்டத்து மகவொடு வழங்கி
கோடை நீடினும் குறைபடல் அறியாழ்
தோள்தாழ் குளத்த கோடு காத்திருக்கும்
கொடுமுடி “வலைஞர்” குடிவயிர் சேப்பின்.
என்ற வரிகள் மூலம் கடியலூர் உருத்திரங்கண்ணர் குறிப்பிடுகின்றார்.
அந்தக் குளத்தை வளைந்த முடிகளைக் கொண்ட அவ்வலையர்களே காவல்காப்பனராம். இதனையெல்லாம் குறிப்பிட்டு அப்பாணன், ‘நீ அவர்களின் இல்லத்தில் சென்று தங்கலாம்’ என்று இன்னொரு பானனிடம் சொல்லுகிறான். மேலும் அவ்வலையர்களின் விருந்தோம்பல் பண்பையும் அவனிடத்தே எடுத்துச் சொல்லுகிறான்.
வலையர்களே தயாரித்த கள்! ;
அவையா அரிசி அம்களித் துழவை (275)
மலர்வாய்ப் பிழாவில் குரும்பி ஏய்க்கும்
பாம்புஉறை அடை அனைஇத் தேம்பட
எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி,
வளவாய்ச் சாதியின் வழைச்சுஅற விளைந்த,
வெந்நீர்,அரியல் விரல்அலை,நறும்பிழி,
தண்மீன் ஆட்டோடு தளர்தலும் பெறுகுவீர்
வலையர்கள் தமது குடிலிலே குற்றாத கொழியல் அரிசியை பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் இட்டு களி போன்று கூழ் சமைப்பர். மேலும் அதில் புற்றாம் சோறு போன்ற நெல்முனையை இடித்துக் கலப்பனராம். அதனை இரண்டு நாட்கள் இரவும் பகலும் ஊற வைத்து பின்னர் உறுதியான பெரிய சாடியில் அதனைக் கொட்டி, வெந்நீரை அவற்றுள் ஊற்றி வேக வைப்பனாராம். பின்பு கையால் துழவி நெல் அரிப்பால் அதனை வடிகட்டுவர். அது சுவையான மதுவாக அமையும். இப்படித் தமக்குத் தேவையான மதுவை தொண்டைநாட்டு வலையர்கள் தாமே தயாரித்துக் கொண்டனராம். அந்த மதுவையும், சுட்ட மீனையும் பாணனே உனக்கு அமுதாக வலையர் படைப்பர், சோர்வைப் போக்க நீயதை உண்ணலாம் என்று பரிசில் பெற்ற பாணன், மற்றொரு பாணனிடம் சொல்லுகிறான்.