கல்வெட்டுகளில் முத்தரையர்...! - விருதுநகர் மாவட்டம்.
வரிசை எண் 1.
கல்வெட்டு அமைந்துள்ள இடம்:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், கல்லுமடை கிராமம் திருநாகேசுவரமுடையர் கோயில் தென்புறக் கல்.
கல்வெட்டு :
* ஸ்ரீ கோனோற்றமை கொண்டான் பருத்திக்கு
டிநாட்டு பாப்பார சான்றார்க்கும் பாற்குடி
களுக்கும் பிரமதேய கிழவர்க்கும்
‘கேரள சிங்க முத்தரைய’னாயின ‘மகாதேவன் மரு
தன்’ சாழ நாட்டு திருப்பாலை ஊர் தேவருக்கும்....”
டிநாட்டு பாப்பார சான்றார்க்கும் பாற்குடி
களுக்கும் பிரமதேய கிழவர்க்கும்
‘கேரள சிங்க முத்தரைய’னாயின ‘மகாதேவன் மரு
தன்’ சாழ நாட்டு திருப்பாலை ஊர் தேவருக்கும்....”
“ சொன்னமையில் சாணாட்டு திருப்பாலை ஊர்
வர்க்கு தேவதானமாக தங்கணாட்டு மேன்முக்
குளத்து கேரளசிங்க முத்தரையனான மகாதேவன் மருதன் தன் காணிப்பற்றில்...”
வர்க்கு தேவதானமாக தங்கணாட்டு மேன்முக்
குளத்து கேரளசிங்க முத்தரையனான மகாதேவன் மருதன் தன் காணிப்பற்றில்...”
கல்வெட்டு விளக்கம்:
கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ள “கேரளசிங்க முத்தரையனான மகாதேவன் மருதன்” என்பான், மேன்குளத்திலுள்ள தமது காணிப்பற்றினைச் சார்ந்த புலக் குளத்துச் சேல்கல் நிலத்தை சாழநாட்டு திருப்பாலையூர் இறைவனுக்கு இறையிலியாக (தானமாக) அளித்த செய்தியினை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டின் காலம் சரிவரத் தெரியவில்லை என்றாலும் எழுத்தமைதியைக் கொண்டு நோக்குமிடத்து இது முற்காலப் பாண்டியர் காலத்தியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் இந்தக் கல்வெட்டில் "வலையகற்பக நல்லூரான பெருமூர்" என்ற ஊரும் குறிக்கப்பெற்றுள்ளது. முத்தரையர்களும் வலையர்களும் ஒருவரே என்பதை நிறுவும் விதமாக பழங்காலச் சான்றுகளில் முத்தரையர்களின் ஊர்ப் பெயர்கள் பலவும் "வலைய..." எனும் முன்னொட்டுடனே தொடங்குவதை இங்கு நினைவில் கொள்ளவும்.
ஆதாரம்; விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் (203 / 2005).
வரிசை எண் 2.
கல்வெட்டு அமைந்துள்ள இடம்:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், கல்லுமடை கிராமம் திருநாகேசுவரமுடையர் கோயில் , கோச்சடையான் மாறன் காலம் (10-ம் நூற்றாண்டு), இந்திய கல்வெட்டு ஆராய்ச்சி அறிக்கை (ARE)- 291/ 1977-78.
கல்வெட்டு :
* “கோச்சடைய மாறற்கு யாண்டு இதனெதிரா
மாண்டு சாழநாட்டு தேவதானம் திரு
ப்பாலை ஊர் வடரார்கு பருத்தி
திக்குடி நாட்டு மேன்முக் குள
த்து கேரளசிங்க முத்தரையனா
யின மகாதேவன் மருதன் திருநெ
ந்தா விளக்கு ஒன்று எரிய....”
மாண்டு சாழநாட்டு தேவதானம் திரு
ப்பாலை ஊர் வடரார்கு பருத்தி
திக்குடி நாட்டு மேன்முக் குள
த்து கேரளசிங்க முத்தரையனா
யின மகாதேவன் மருதன் திருநெ
ந்தா விளக்கு ஒன்று எரிய....”
கல்வெட்டு விளக்கம்:
சாழ நாட்டிலுள்ள திருப்பாலையூரிலுள்ள சிவன் கோயிலின் இறைவனுக்கு பருத்திக்குடி நாட்டு மேன்குளத்தைச் சேர்ந்த “கேரளசிங்க முத்தரையன்” என்ற குடிப்பெயர் கொண்ட ‘மகாதேவன் மருதன்’ என்பான், நந்தா விளக்கு எரிக்க 25 பசுக்களைத் தானமாக வழங்கினான் என்பதை கல்வெட்டு எடுத்துச் சொல்லுகிறது.
வரிசை எண் 3.
கல்வெட்டு அமைந்துள்ள இடம்:
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், கல்லுமடை கிராமம் திருநாகேசுவரமுடையர் கோயில் , வடபுற அதிட்டானத்திலுள்ள கல்வெட்டு. எம்மண்டலமும் கொண்டருளிய மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் காலத்தியது (கி.பி. 1285). இ.க.ஆ.அ. 287/ 1977-78.
கல்வெட்டு:
* பருத்திகுடி நாட்டுப் பூம்பிழால் முத்தரையர் கோட்டை ஊ
ரோமும் கண்மியர் கோட்டை ஊராயிசைந்த ஊரேமு
மாடக் குளக்கீழ் மதுரை வடபால்...”
ரோமும் கண்மியர் கோட்டை ஊராயிசைந்த ஊரேமு
மாடக் குளக்கீழ் மதுரை வடபால்...”
கல்வெட்டு விளக்கம்:
இந்தக் கல்வெட்டின் மூலம் அறியலாகும் செய்தி யாதெனில் அக்காலத்தில் பருத்திக்குடி நாட்டில் முத்தரையர் கோட்டை, கண்மியார் கோட்டை என்ற பெயரிலமைந்த இரு கிராமங்கள் இருந்துள்ளன. அவ்வூர் மக்கள் திருவையாற்று ஏம்பலான திருஞான சம்பந்த நல்லூரான மதுரை வடபால் உள்ள ஊரினை, வாது செய்த வாரணபுரத்து கைக்கோளர் தேவன் சுந்தர பாண்டியருக்கு விற்றுக் கொடுத்துள்ளனர். பின்னர் அந்த ஊர், திருப்பாலையூர் ஈசுவரமுடையார் கோயிலுக்கு தானமாகத் தரப்பட்டது. இதற்கான உடன்படிக்கையில் முத்தரையர்கள் பலர் கையெப்பமிட்டுள்ளனர்.
வரிசை எண் 4.
கல்வெட்டு அமைந்துள்ள இடம்;
திருச்சுழி வட்டம் , கல்லுமடை கிராமம் 'திருநாகேசுவரமுடையர் கோயில்' கருவறையின் மேல்புற அதிட்டானம்...
காலம்: மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் 37வது ஆட்சியாண்டு( கி.பி 1305)
கல்வெட்டு;
" பருத்திகுடி நாட்டு பூம்பிழால் முத்தரையன் கோட்டை காரணவரும் கண்மியார் கோட்டை காரணவரும் இவ்வனைவோமும் கல்வெட்டில் கொடுத்த பரிசாவது..."
கல்வெட்டு விளக்கம்;
முத்தரையன் கோட்டையின் முக்கிய நபர்களும், கண்மியர் கோட்டை கிராமத்தவர்களும் இணைந்து , மதுரைக்கு வடக்கிலுள்ள வாதுசெய்த வாரணபுரத்து கைக்கோள் தேவாரமழகியான் என்பவனுக்கு திருப்பாலையூர் குளத்தால் நீர் பாயும் நிலத்தை 300 வராகன் பணத்திற்காக விற்றுக் கொடுத்துள்ளனர். மேலும் இந்நிலத்தின் வரிகள் திருப்பாலையூர் கோயிலுக்கு அளிக்கப்பட்டதையும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சான்று; இந்திய கல்வெட்டு ஆய்வு அறிக்கை 288/1977-78.
வரிசை எண் 5.
கல்வெட்டு அமைந்துள்ள இடம்;
திருச்சுழி வட்டம் , கல்லுமடை கிராமம் 'திருநாகேசுவரமுடையர் கோயில் தென்புற அதிட்டாணம், கி.பி. 1264ம் ஆண்டைச் சேர்ந்தது.
கல்வெட்டு;
" இராசசிங்க குளக்கீழ் இராசேந்திரத்து முதலியார் பூவனரான சிநுங்க தேவர்க்கு பருத்திக்குழி நாட்டு பூம்பிழால் முத்தரையன் கோட்டை
கண்மியார் கோட்டை ஊராரிசைஞ்ச ஊரோம் காணி விலைப் பிராமணம்..."
கண்மியார் கோட்டை ஊராரிசைஞ்ச ஊரோம் காணி விலைப் பிராமணம்..."
கல்வெட்டுச் செய்தி;
இரு ஊர் மக்களும் சேர்ந்து சிநுங்க தேவர் என்பார்க்கு குறிப்பிட்ட ஒரு ஊருக்கான காணியாட்சி உரிமையை வழங்கிய செய்தியினைக் கூறுகிறது.
சான்று; இ.க.ஆ.அ 284/1977-78
வரிசை எண் 6.
கல்வெட்டு அமைந்துள்ள இடம்;
திருச்சுழி வட்டம் , கல்லுமடை கிராமம் 'திருநாகேசுவரமுடையர் கோயில்' , கி.பி 1245 ம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டு.
கல்வெட்டு :
"அழகன் வகைக்கு பூம்பிழால் முத்தரையன் கோட்டை கண்மியார் கோட்டை காரணவரும்...
இது இராசசிங்கத் தரையன் தற்குரிக்கும் இப்படிக்கிவை சாயப்படை முத்தரையன் எழுத்து"
இது இராசசிங்கத் தரையன் தற்குரிக்கும் இப்படிக்கிவை சாயப்படை முத்தரையன் எழுத்து"
கல்வெட்டுச் விளக்கம் ;
ஊராரிடமிருந்து கற்குளத்து கண்ண நாராயன குமாரண தேவன், நஞ்சமான் குணமான கலங்காத கண்ட பேரேரியை விலைக்கு வாங்கி கோயிலுக்கு தானமளித்தான். இதற்கான சாட்சிக் கையெழுத்தை முத்தரையன் கோட்டை கிராமத்தைச் சேர்ந்த நாசக னாழ்வனான சாயப்படை முத்தரையனிடமிருந்தும் பெற்றுள்ளனர்.
சான்று; இ.க.ஆ.அ: 283/1977-78.
வரிசை எண் 7.
கல்வெட்டு அமைந்துள்ள இடம் :
திருச்சுழி திருமேனிநாத சுவாமி கோயில். அர்த்தமண்டபச் சுவர். கல்வெட்டு பதினோராம் நூற்றாண்டைச் சார்ந்தது.
கல்வெட்டு:
"...ணி முத்தரைய நாயிச திருநந்தாவி ளக்கு ஒன்று இரவும் பயொடுக்கு..."
கல்வெட்டுச் விளக்கம் :
ஆலயத்தில் நந்தா விளக்கெரிக்க முத்தரையன் ஒருவன் கொடை அளித்துள்ள செய்தியைக் குறிப்பிடுகிறது.பாதிக் கல்வெட்டு சிதைந்துள்ளது
சான்று: விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் 180/2005.

















