வியாழன், நவம்பர் 20, 2014

"வீரமுத்தரையர் முன்னேற்ற சங்க"த்தின் கண்டனப் பொதுக்கூட்டம்-படங்கள்.













புதுக்கோட்டை மாவட்டத்தில் வாழுகின்ற  முத்தரையர் சமுதாய மக்கள்,தாம் சார்ந்த அமைப்புகளின் மூலம் சமுதாயப் பணியாற்றுவதற்கு மாவட்டக் காவல்துறை அண்மைக்காலமாக தொடர் தடைகளை விதித்து வருகின்றது, இதன் காரணமாக மாவட்டத்தில் முத்தரையர் சமுதாயத்தைச் சார்ந்த எந்த ஒரு சங்கமும் பொதுக்கூட்டங்களையோ,கொடியேற்று விழாக்களையோ,மாணவர்களுக்கான கல்விப் பரிசளிப்பு விழாக்களையோ  நடத்த முடியாத சூழலில் உள்ளன.முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான வகையில்,உள்நோக்கோடு காவல்துறை இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.முத்தரைய மக்களுக்கு எதிரான இச்செயலைக் கண்டித்தும்,இதற்குத் துணை போகின்ற காவல்துறையினரின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தும் விதமாக  கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று திருமயம் பகுதிகளில் காவல்துறையினரின் தடையையும் மீறி பல இடங்களில் கொடியேற்று விழாவும்,பெயர்ப் பலகை திறப்பு விழாவும் "வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்" சார்பாக முன்னெடுக்கப்பட்டது.மேலும் ஆதனூர் கிராமத்தில் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டமும் நடைபெற்றது,பொதுக்கூட்டத்தில்ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக